கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | 1477-மண்ணில் பூத்த விண் மலரே |
மண்ணில் பூத்த விண் மலரே என்னிதயம் மலர்ந்தருள்வாய் மண்ணில் அன்றே பிறந்துவிட்டாய் என்னில் இன்று பிறந்திடுவாய் நெஞ்சக் கோயில் திறந்து வைத்தேன் நீங்கா அன்பில் நிறைந்திடுவாய் சேயென் உயிரில் கலந்திடுவாய் நீயென் மூச்சாய் இயங்கிடுவாய் மாந்தர் நெஞ்சில் பிறக்க வேண்டும் வானின் அன்பு சுரக்க வேண்டும் பகைமை போரின் கோரமெல்லாம் பாரில் மாய்ந்து ஒழிய வேண்டும் அண்ணல் நாமம் தழைக்க வேண்டும் அன்பின் ஆட்சி நிலைக்க வேண்டும் |