கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | 1475-மாடடைக் குடிலில் |
மாடடைக் குடிலில் மன்னவன் இயேசுவை வணங்கிடச் செல்வோமே அவன் பாதங்கள் பணிந்து காணிக்கை வழங்கி உள்ளங்கள் மகிழ்வோமே (2) உன்னதங்களிலே கடவுளின் நாமம் முழங்கிட சொல்வோமே பூவுலகினிலே நல்மனத்தோராய் என்றும் நாம் வாழ்வோமே ஏழைகள் வாழ்வு உயர்ந்திட - தினமும் அயராது உழைப்போமே (2) பாலகன் இயேசுவின் பிறப்பின் செய்தியை உலகிற்குச் சொல்வோமே ஏழை எளியவர் வாழ்வு உயர்ந்திடும் என்பதில் மகிழ்வோமே மனிதரை மனிதர் மதித்து வாழ்ந்துமே மனங்களை வெல்வோமே (2) |