Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் 1469-மாமன்னன் உலகினிலே  
மாமன்னன் உலகினிலே இன்று பிறந்தார்
மாடடையும் தொழுவினிலே கண்கள் திறந்தார் (2)
மாமரியின் கைகளிலே தன்னை மறந்தார்
மாமுனியின் உறவினிலே உள்ளம் மகிழ்ந்தார் (2)
மங்களங்கள் பாடுவோம் மன்னன் வரவிலே
நெஞ்சினிக்கப் பாடுவோம் குழந்தை உறவிலே (2)

மார்கழி மாதக் குளிரில் பிறந்ததும் ஏனோ
மன்னவனாய் இந்நிலையில் உதித்ததும் ஏனோ (2)
பூவிழியில் நீர் திரள அழுததும் ஏனோ
புல்லணையில் கண்வளர வருந்துதல் ஏனோ (2)
மானிடரின் வாழ்வினிலே மகிழ்வைக் கொடுக்க
மண்ணில் வந்த குழந்தையே எங்கள் தெய்வமே (2)
மங்களங்கள் பாடுவோம்...

வானக உறவை ஒதுக்கி வைத்ததும் ஏனோ
வையகம் வந்து குளிரில் நடுங்குதல் ஏனோ (2)
தேன் மதுரக் குழலோசை பிரிந்ததும் ஏனோ
தெய்வீகப் பொன்முடியைத் துறந்ததும் ஏனோ (2)
பாவிகளை மீட்பதற்கு வந்த தெய்வமே
புத்துலகம் செய்வதற்கு எங்கள் தஞ்சமே (2)
மங்களங்கள் பாடுவோம்...
 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா