கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | 1473-மார்கழி மலரே ஆராரோ |
மார்கழி மலரே ஆராரோ மரியின் மகனே ஆரிரரோ (2) இசையின் ஏழு ஸ்வரமும் நீ இதயம் வாழும் இறைவன் நீ (2) இயேசு பிறந்தார் உள்ளம் உறைந்தார் விண்ணில் மகிமை மலர்ந்ததே இயேசு பிறந்தார் நெஞ்சம் நிறைந்தார் மண்ணில் அமைதி நிறைந்ததே இடையர்க்கு காட்சி தந்தாய் ஞானிகள் வணங்க நின்றாய் (2) குடிலினில் தவழ்ந்து வந்தாய் குவலயம் விளங்கச் செய்தாய் (2) கருணை வடிவே அன்பின் உருவே கலங்கரைவிளக்கே கண்ணின் மணியே (இயேசு பிறந்தார்...) ஏழ்மையில் பிறந்து வந்தாய் எளிமையை உடுத்தி நின்றாய் (2) மனதிலே அமைதி தந்தாய் மனிதனாய் வாழச் செய்தாய் (2) வடிவாய் வரமாய் பிறந்த மகனே வசந்தம் வழங்கும் செல்ல மகனே (இயேசு பிறந்தார்...) |