Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் 1472-மன்னன் இயேசு பிறந்துவிட்டார்  
மன்னன் இயேசு பிறந்துவிட்டார்
விண்ணையும் மண்ணையும் இணைத்துவிட்டார்
பூலோகம் மகிழ்ந்து பாடுதே - இனி
நாளெல்லாம் வசந்தம் வீசுமே (2) தந்தன தானா... - 4

தெய்வம் இன்று மனித ரூபம் எடுத்து வருகிறார்
தேடி நம்மை மீட்டுக் கொள்ள
விரைந்து வருகிறார் (2)
களங்கமில்லா அன்பை நாளும் காட்டுவார்
கலங்கிடாத நெஞ்சம் நம்மில் அருளுவார்
மகிழ்ச்சியோடு தினமும் பாடுவோம்
பாலனை நாம் புகழ்ந்து பாடுவோம் தந்தன தானா... - 4

உலகை ஒரு குடும்பமாக மாற்ற வருகிறார்
உறவின் பாலம் அமைத்திடவே
உலகில் வருகிறார் (2)
உள்ளம் குமுறும் அனைவருக்கும் மகிழ்வு தருகிறார்
உண்மை நீதி அமைதி நமக்கு கொண்டு வருகிறார்
மகிழ்ச்சியோடு தினமும் பாடுவோம்
பாலனை நாம் புகழ்ந்து பாடுவோம் தந்தன தானா... - 4
 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா