Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் 1470-மனித குடும்பத்தில்  

மனித குடும்பத்தில் - புது
மழலை பிறந்தது
மகிழ்வின் சேதியை - இந்த
மண்ணும் கண்டது (2)
நாம் அனைவரும் கூடி ஆனந்தம் கொண்டாடி
அவனியில் பாடுவோம் - இந்த
மண்ணதின் மழலையும் மனிதத்தின் சிறப்பையும்
மதித்தே வாழுவோம்

நிலமும் நீரும் நெருப்பும் - இன்று
நெகிழ்ந்து பாடுதே
ஆகாயம் காற்றும் அவையுடனே - புது
ஆகமம் கூறுதே (2)
மனிதம் கொண்ட இறைமகனுடனே
மண்ணகம் எல்லாம் இணைகின்றதே
மீட்பின் ஒளியில் படைப்புகள் - இன்று
மாட்சி காணுதே

உலவும் உயிரினம் யாவும் - இன்று
உவகை கொள்ளுதே
உலகின் மாந்தர் அவையுடனே - புது
உயர்வை வெல்லுதே (2)
மனிதம் கொண்ட இறைமகன் தன்னில்
மானுடம் எல்லாம் இணைகின்றதே
மீட்பின் ஒளியில் மனிதம் - இன்று
மாட்சி காணுதே

 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா