கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | 1469-மங்கள கீதம் பொங்கி முழங்க |
மங்கள கீதம் பொங்கி முழங்க எங்கணும் மீட்பு தங்கி நிறைய தேவன் பிறந்தார் எங்கள் தேவன் பிறந்தார் - 2 வானகம் மண்ணில் வந்து இறங்க மண்ணகம் அவரின் இல்லம் என்றாக மன்னன் பிறந்தார் எங்கள் மன்னன் பிறந்தார் - 2 பொங்கிடும் மனங்களெல்லாம் தேவன் மகன் வரவால் தங்கிடும் அருள் வரங்கள் உன்னதரின் துணையால் (2) எங்கணும் காணும் தீமைகளெல்லாம் ஓடி ஒழியும் நாளும் வந்ததே மங்கிடும் இருளின் சக்திகளெல்லாம் ஒழியும் காலம் தேடி வந்ததே சங்கொலி முழங்கி வெற்றி பண்ணிசைத்து வாழ்த்துக்கள் பாடிடுவோம் காலங்கள் காத்திருந்தோம் நம்பிக்கையோடிருந்தோம் ஞாலங்கள் இறைவன் வரவால் மாறும் என இருந்தோம் (2) வீதிகள் எங்கும் வாழ்வு வந்ததே நற்செய்தியாக பொங்கி வந்ததே வேதனை துன்பம் இல்லையென்றாக புதிய வேதம் மண்ணில் வந்ததே உறவும் மலரும் நம்பிக்கை வளரும் உலகம் ஒன்றாகும் |