கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | 1468-ஆகா மன்னவன் இறைவன் |
ஆகா மன்னவன் இறைவன் - இந்த உலகினில் வந்த திருநாளே மன்னவர் விழையும் - நல்ல அமைதியைத் தந்த திருநாளே (2) விண்ணகத் தந்தையின் அன்பை உலகம் கண்ட திருநாளே (2) இன்னலும் மறைந்து நன்மைகள் செழிக்க தங்கத் திருநாளே - நல்ல திருநாளே ஓ... தங்கத் திருநாளே அன்பருள் வெள்ளமும் பாய்ந்து வரும் இன்பத் திருநாளே (2) தென்றலைப் போல நல்லருள் பூவில் உலவும் நன்னாளே - நல்ல திருநாளே ஓ... தங்கத் திருநாளே |