Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் 1467-மண்ணில் இன்று மனிதம்  
ஆ........ஆ.......ஆ....................ஆ.........ஆ
மண்ணில் இன்று மனிதம் காக்க
வந்தாய் எங்கள் பாலனே
என்னில் இன்று இன்பம் பொங்க
இதயத்தோடு பேசுமே
நட்சத்திரக்கூட்டம் பூ தெளிக்கும் - அந்த
வானவில்லும் கூட குடைபிடிக்கும் ஆ..ஆ..
நட்சத்திரக்கூட்டம் பூ தெளிக்கும் - அந்த
வானவில்லும் கூட குடைபிடிக்கும் ம்ம்ம்

விண்ணின் வெள்ளி நிலவே - எந்தன் உள்ளம் ஏங்குதே
மண்ணில் வந்த ஒளியே - எந்தன் துன்பம் நீங்குதே
புல்வெளியில் பனியுறங்கும் காலமிது நாதனே
கண்மணியில் நீர் துடைக்க நீயும் வந்த நேரமே
ஒளியே எழிலே விண்மலரே - இம்
மண்ணில் வந்த புது நிலவே
உள்ளத்தின் ஏக்கம் உன்னால் நிறைவாகிப் போகுதே
உறவுக்குள் உன்னைக் கண்டு உள்ளம் போற்றிப் பாடுதே 2

விண்நிலவின் ஒளியில் காண்பது - உன் முகமே
எண்ணில்லா சுகங்களில் எந்தன் உள்ளம் - பரவசமே
அலையெழும் கடல்நீர் எழுவாய் எம்முள்ளே
சுகம் நிறை அமைதியில் எழுவாய் எம்முயிரே
அன்பே அழகே அருளுயிரே - எம்
அருகில் மலர்ந்த புது உறவே
உள்ளத்தின் ஏக்கம் உன்னால் நிறைவாகிப் போகுதே
உறவுக்குள் உன்னைக் கண்டு உள்ளம் போற்றிப் பாடுதே

 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா