கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | 1465-மதுரமான யேசுவே |
மதுரமான யேசுவே உமது நேசம் தருகவே அதிஅன்பான பாலனே எமக்கு ஆசி அருள்வாயே ஆதிபிதா ஆனவரின் அன்பான புத்திரனே பாதிரவில் நீர் எமக்காய் புத்திரன் ஆகினீரோ வான்வீட்டை நீர் துறந்து மனித வேசம் புண்டு ஈனமாட்டுக் கொட்டிலிலே எமக்காய் உதித்தீரோ வீசு குளிர் காற்றினில் நீர் வேதனைகள் சகித்தீர் நீசன் எம்மேல் அவ்வளவு நேசமோ பாலகனே கர்த்தனான நீர் அழுது கண்ணீர் சொரிவதென்னவோ எத்தனையோ கதி இயல்லாம் எமக்காய் சகித்தீர் கூவென்று நீர் அழுது பாவிகளுக்காகவோ ஓ எம்மையும் நீர் நினைத்து உருகி அழுதீரோ நேசமான பாலகனே நீர் எம்மை நேசித்தால் ஆசையுடன் உம்மை என்றும் அடியேனும் நேசிப்பேன் உம்முடைய கண்ணீர்களை உமக்காய் துடைப்பேன் விம்மி விம்மி இனி அழவேண்டாம் எம்பாலகனே |