Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் 1461-பொன்னும் வெள்ளைப் போளமும்  
பொன்னும் வெள்ளைப் போளமும்
அரசர் தந்த காணிக்கை
அப்ப ரசமும் பலிகளும்
ஏழை யாம் தரும் காணிக்கை

ஆடு மேய்க்கும் ஆயர்கள்
அகில ஆயனைக் கண்கொண்டார் (2)
மாடு வாழும் குடிலிலே
ஆட்டுக்குட்டி தந்தாரே

ஏழைக் கைம்பெண் காணிக்கை
ஏத்திப் போற்றி ஏற்கிறேன் (2)
எளியோர் எங்கள் காணிக்கை
இயேசு பாலா ஏற்பீரே

பொருளால் மிகுந்த வாழ்க்கை
பொருளில்லாமல் ஆனதே (2)
அருளால் நிறைந்து வாழ்வதே
அர்த்தமாக ஆகுமே
 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா