Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் 1460-பொழுது புலரும் நேரமிது  
பொழுது புலரும் நேரமிது
தென்றல் தாலாட்டும் பாடுது
பூத்தூவி வானவர் - உன்னை
வாழ்த்திப் பாடிட (2)
புன்சிரிப்போடு துயிலும் - பாலன்
இயேசுவே ஆராரோ (2) ஆராரோ ஆரிரரோ - 2

துன்பத்திலே துவண்டு வாழும் ஏழை உள்ளங்களே
பாவத்திலே பரிதவிக்கும் இறைவன் சாயல்களே (2)
கண் கலங்கிட வேண்டாம் - உள்ளம்
வருந்திட வேண்டாம் (2)
நல் கரம் கொடுத்து வாழவைக்க
இயேசு பிறந்துள்ளார் (2)
ஆராரோ ஆரிரரோ - 2

உள்ளத்திலே இறைவன் அரசு உதயமாகட்டும்
நம் இல்லத்திலே இறைவனருள் வந்து தங்கட்டும் - நம் (2)
உலகெத்திசையிலும் - இறை
மாட்சி ஓங்கட்டும் (2)
உலக மாந்தர் அனைவரும் - இறை
அன்பில் வாழட்டும் (2)
ஆராரோ ஆரிரரோ - 2
 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா