Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் 1459-பெத்தலையிலே  
பெத்தலையிலே சின்னப் பாலன் பிறந்தார்
இறைவன் நம்மோடு கொண்டாடுவோம் (2)
தனை வழங்கும் தலைவன் இவரே - 2
உள்ளக் குடிலில் பிறந்து வந்த ஒளியே
பெத்தலையிலே சின்னப் பாலன் பிறந்தார்
இறைவன் நம்மோடு கொண்டாடுவோம்

ஏழைகள் வாழ்வினிலே - புது
நற்செய்தி ஒளியாகினாய்
சிறை உழன்றோரெல்லாம் விடுதலை - என்றும்
அடைந்திட உழைக்க வந்தாய் (2)
ஆண்டவர் அருள்தரும் ஆண்டினைக் கொணர்ந்தாய் - 2
உலக இருளகற்றும் ஒளி விளக்கே

விழிகளை இழந்தவரின் - புதுப்
பார்வைகள் நீயாகினாய்
ஒடுக்கப்பட்டோரெல்லாம் உரிமைகள் - பெற்று
மகிழ்ந்திட மலர்ந்து வந்தாய் (2)
ஆண்டவர் அருள்தரும் ஆவியைப் பொழிந்தாய் - 2
அன்பின் வழி நடக்க எமைப் பணித்தாய்
 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா