Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் 1458-பெத்தலையில் வந்துதித்த  
பெத்தலையில் வந்துதித்த
எங்கள் இயேசு ராஜாவை
கொட்டிலினில் முன்னிட்டியில்
தவழுகின்ற தேவனை (2)
பாக்கள் பாடி வாழ்த்துவோம்
நடனமாடிப் போற்றுவோம் (2)

வானதூதர் அறிவித்தார்
மாபெரும் நற்செய்தியை (2)
இடையர்கள் வந்தனரே - அவரைப்
பணிந்து கொண்டனரே (2)
வாருங்களே அவரைப் பாடுங்களே - 2

விண்ணில் தோன்றும் நட்சத்திரம்
மூன்று ஞானியர் கண்டனரே (2)
நீண்ட தூரம் வந்தனரே - புதிய
வாழ்வைக் கண்டனரே (2)
வாருங்களே அவரைப் பாடுங்களே - 2

 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா