Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் 1457-பெத்தலகேம் குடிலில்  

பெத்தலகேம் குடிலில் மரியின் மடியில்
தவழும் என் பாலா - எந்தன்
இதயத்தில் நீ வாராய் (2)

ஏழ்மையை ஏற்று எளிமையில் வாழ்ந்திட
குடிலினில் நீ பிறந்தாய் - நல்
குழந்தையாய் நீ தவழ்ந்தாய் (2)
இந்த ஏழையின் இதயக் குடிலினில் தவழ
எழுந்து நீ வாராய் எழுந்து நீ வாராய்

பாவிகள் வாழ்வைப் பரிசுத்தமாக்கிட
பாரினில் நீ பிறந்தாய் - பனிச்
சாரலில் நீ மலர்ந்தாய் (2)
இந்த பாவியின் உள்ளக் குடிலினில் தவழ
எழுந்து நீ வாராய் எழுந்து நீ வாராய்


 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா