கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | 1456-பூஇமைகள் மூடி |
பூஇமைகள் மூடி கண்ணுறங்கும் பாலன் யார் பூவுலகை நாடி வந்திருக்கும் மைந்தனார் முன்னணையில் உள்ள புல்லணை உன் மஞ்சமானதோ ஆரிராரிராரிராரோ நம்மை இரட்சிக்க வந்தாரோ - 2 வானத்தின் மகிமையை விடுத்து வந்தனையோ வையத்தின் சுமைகளை ஏற்க வந்தனையோ (2) தந்தையின் ஆசையோ ஆஹா தந்தையின் ஆசையோ - பூஇமைகள்... ஆரிராரிராரிராரோ... மாட்டுத் தொழுவத்தில் பிறந்ததும் ஏனோ மாந்தர் குற்றங்களை மன்னித்ததும் ஏனோ (2) தந்தையின் ஆசையோ ஆஹா தந்தையின் ஆசையோ - பூஇமைகள்... ஆரிராரிராரிராரோ... வாலோடு நட்சத்திரம் துலங்கியதேனோ ஏரோது ராஜனும் கலங்கியதேனோ (2) ராஜன் நீரன்றோ யூத ராஜன் நீரன்றோ - பூஇமைகள்... |