கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | 1450-பனிவிழும் இரவில் |
பனிவிழும் இரவில் கனி ஒன்று கனிந்தது பெத்லேகம் குடிலில் - அது மரியன்னை மடியில் மகிழ்வுடன் சிரித்தது பாலகனின் வடிவில் - (2) ஒரு குழந்தை பிறந்தது - அன்னை மடியில் தவழ்ந்தது (2) பணிமக்கள் உலவும் மாளிகையெல்லாம் நகரில் நிறைந்திருக்க - (2) - அது தனியிடம் தேடி கிடைகளின் நடுவில் மகிழ்வாய் பிறந்தது எளிமையில் தான் அமைதி என்னும் உண்மை உரைத்தது படுக்கை மெத்தை பஞ்சணை சுகங்கள் அனைத்தும் காத்திருக்க - (2) - அது நடுக்கும் குளிரில் கந்தை துணியில் களைத்தே உறங்கியது தியாகத்தில் தான் அமைதி என்னும் உண்மை உரைத்தது ஆயிரம் பேர்கள் தரிசனம் காணும் ஆவலுடன் இருக்க - (2) - அது தூயராய் வாழும் ஆயரைத் தேடி தூதரை அனுப்பியது தூய்மையில் தான் அமைதி என்னும் உண்மை உரைத்தது |