Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் 1449-நெஞ்சிலே என் நெஞ்சிலே  
நெஞ்சிலே என் நெஞ்சிலே
நீ பிறந்து வா
என்னிலே என் உயிரிலே
நீ கலந்து வா
உன்னோடு வாழ்ந்து உனக்காகச் சாய்ந்து
உன் வீட்டில் உறவாடுவேன் (2)

தாழ்மையும் ஏழ்மையுமே
தரத்தினில் சிறந்ததென்று
மாடடைத் தொழுவத்திலே - நீ
முதலடி எடுத்து வைத்தாய்
உன் மாண்பையே நான் உணரவே
வலுவின்மையில் வலுவடையவே
கல்வாரி முடிவுரை எழுதி வைத்தாய்
பலிபீடம் எழுந்தென்னை அரவணைத்தாய்

மரணத்தின் நிழலினிலே
வாழ்ந்திடும் நெஞ்சங்களே
தொழுவத்தின் பேரொளியை
இதயத்தில் ஏற்றிடுங்கள்
ஒளி பட்டதால் இருள் போகுது
அருள் சித்தத்தால் இன்பம் பாயுது
உணவாக எனக்குள்ளே பிறந்தாய்
பிணி தீர்க்கும் மருந்தாக எழுந்தாய்
 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா