Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் 1448-நன்றி பாடுவோம்  
நன்றி பாடுவோம் - நாங்கள்
நன்றி பாடுவோம்
பாலனே உமைப் - புகழ்ந்து
நன்றி பாடுவோம் (2) நன்றி...

தந்தையாக தாயுமாக - எம்மைத்
தாங்கினாய்
நல்ல தோழனாக - சோகம்
போக்கும் சொந்தமாகினாய் (2)
உணவு தந்து உறுதி தந்து
எமைக் காக்கிறாய்
எங்கள் இதயக்கோயில் - எழுந்து
தங்கும் தெய்வமாகினாய் (2)
இதயக்கோயில் எழுந்து தங்கும் தெய்வமாகினாய்

பாலையாகக் காய்ந்த  வாழ்வைச்
சோலையாக்கினாய் - நாளும் 
பாதை தந்து பயணம் செய்ய தீபமாகினாய் (2)
வலிமை தந்து வளமை சேர்த்து
வாழச் செய்கிறாய்
இங்கு என்றும் உமது - சாட்சியாக
எம்மை மாற்றினாய் (2)
என்றும் உமது சாட்சியாக எம்மை மாற்றினாய்

 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா