Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் 1446-நம் மீட்பர் யேசு  
நம் மீட்பர் யேசு பிறந்தார் - நாமும்
ஒன்று கூடி வாழ்த்துக் கூறுவோம்
வாழ்வின் பாதையில் கூட வருவார்
வளங்கள் தந்து நாளும் நம்மைக் காப்பார்
ஆடியே.. பாடியே. கொண்டாடுவோம்
நம் மீட்பர்..
நம் மீட்பர் யேசு பிறந்தார்.நாமும்
ஒன்று கூடி வாழ்த்துக் கூறுவோம்
Merry Merry Merry Christmas
Happy Happy Happy Christmas

உண்மை வாழ்வு வழிகளைக் கற்றுத் தருவார்
உறவில் மகிழ்ந்து வாழவே அருளைப் பொழிவார்
இருளின் பிடியிலிருந்து வெற்றி தருவார் -2
நிம்மதியை நாளும் தந்து நம்மைக் காப்பார்
நம் மீட்பர்..
நம் மீட்பர் யேசு பிறந்தார்
நாமும் ஒன்று கூடி வாழ்த்துக் கூறுவோம்
Merry Merry Merry Christmas
Happy Happy Happy Christmas

மகிழ்ச்சியான வாழ்வு வாழ அழைத்துச் செல்லுவார்
அமைதி நிறை வாழ்வினிலே நிலைபெறச் செய்வார்
துன்ப துயரினில் தாங்கி அணைப்பார் -2
துணையாய் உடனிருந்து நம்மைத் தேற்றுவார்
நம் மீட்பர்

நம் மீட்பர் யேசு பிறந்தார்.நாமும்
ஒன்று கூடி வாழ்த்துக் கூறுவோம்
வாழ்வின் பாதையில் கூட வருவார்
வளங்கள் தந்து நாளும் நம்மைக் காப்பார்
ஆடியே.. பாடியே கொண்டாடுவோம்
Merry Merry Merry Christmas
Happy Happy Happy Christmas

 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா