கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | 1445-துள்ளித்துள்ளி ஆடுது |
துள்ளித்துள்ளி ஆடுது எந்தன் உள்ளமே சொல்லிச் சொல்லி பாடுது எந்தன் நெஞ்சமே விண்ணில் ஆனந்தம் மண்ணில் வந்ததே என்னில் இன்றுதான் சொந்தமானதே விடியல் தேடும் விடியலில் இன்று பொங்கும் ஆனந்தம் வசந்தம் தேடும் வாழ்வில் தங்கும் இன்பப் பேரின்பம் உறவின் சேதி மரியின் மடியில் தவழும் திருநாளே இமமானுவேலாய் நம்மோடு கடவுள் தங்கும் திருநாளே விண்ணில் ஆனந்தம்...... விடியலின் கீதம் முழங்கிட இன்று எங்கும் ஆனந்தம் எளியவர் உள்ளம் தேடிய தெய்வம் தந்தது பேரின்பம் உலகின் ஒளியாய் இறைவன் மண்ணில் மலர்ந்ததிருநாளே எல்லோரும்ஒன்றாய் வாழ்ந்திடச்சொல்லும் மகிமைதங்கும் திருநாளே விண்ணில் ஆனந்தம்.... |