கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | 1441-சின்னக்குழந்தை இயேசுவே |
சின்னக்குழந்தை இயேசுவே என்னில் வந்திடு உன் சின்னச்சின்ன இதழ்களால் முத்தம் தந்திடு சின்னப் பிஞ்சுக் கரங்களால் என்னை அணைத்திடு என் சின்னச் சின்ன நெஞ்சுக்குள்ளே வந்து அமர்ந்திடு கள்ளமில்லா பிள்ளையுள்ளம் எனக்குத் தந்திடு உன்சொல்லை என்றும் மீறா மனஉறுதி தந்திடு அயலாருடன் அன்புடனே இருக்கச் செய்திடு அவர் செய்த பிழையை அன்றே நான் மறக்கச் செய்திடு உன்னைப்போல் பிள்ளையாக மாறச் செய்திடு உன் தாழ்ச்சி பொறுமை அன்பை எனக்கு கற்றுத் தந்திடு உன் அன்பு வழியில் நானும் நடக்க என்னை மாற்றிடு உன் அருள் மழையால் தினம் தினம் நான் நனையச் செய்திடு |