கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | 1440-சின்னக் குழந்தை இயேசுவுக்கு |
சின்னக் குழந்தை இயேசுவுக்கு என்ன கொடுப்பது - நாம் மலரைப் படைத்த மழலைக்கு மலரைக் கொடுப்பதா? கனியைப் படைத்த கண்மணிக்கு கனியைக் கொடுப்பதா? குரலைக் கொடுத்த குழந்தைக்கு இசையை எழுப்பவா விரலைக் கொடுத்த விமலனுக்கு வீணை மீட்டவா? புவியைப் படைத்த பரமனுக்கு புவியைக் கொடுப்பதா? பகலும் இரவும் அவர் புகழைப் பாடித் தொழுவதா? |