கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | 1439-சின்ன சின்ன பூக்கள் |
சின்ன சின்ன பூக்கள் சிரிக்குது - எங்கும் சிங்காரமாய் வந்து பாடுது என்ன நினைத்து இந்த இன்ப அலையோ - 2 மன்னன் இன்று வந்த இரவில் நெஞ்சில் உனக்கோர் இடம் தந்து ரசித்தேன் பூபாளம் உனக்காக நான் பாடுவேன் எந்தன் விழி வாசலிலே - நான் உனக்காய் காத்திருப்பேன் என் வாழ்வின் செல்வம் நீயாகுவாய் - இந்த ஏழையி;ன் கனவும் நீயாகுவாய் மன்னன் இன்று வந்த இரவில் உந்தன் வரவால் மனம் பொங்கி மகிழும் ஓயாத துன்பங்கள் எனை நீங்கிடும் நிலையான என் சொந்தமே - மன நிறைவான என் பந்தமே என் மனக்கோட்டையில் பூவாகுவாய் என் வாழ்வு மலர்ந்திட வழியாகுவாய் மன்னன் இன்று வந்த இரவில் |