Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் 1438-சின்ன சின்னப் பாலகனே  
சின்ன சின்னப் பாலகனே
என்ன தருவது - உனக்கு
என்ன தருவது
சிங்கார பாலகனே என்ன தருவது
காணிக்கை என்ன தருவது (2)

தீப தூப மலர்களெல்லாம்
தூயவனே தரவந்தோம்
தாகம் தீர்க்கும் அப்ப ரசமும்
காணிக்கையாய் கொண்டு வந்தோம் (2)
வாடும் ஏழை எளிய எங்கள் வாழ்வு
அனைத்தும் தரவந்தோம் (2)
பூமகனே பாலகனே ஏற்றுக்கொள்வாயோ

விண்ணும் மண்ணும் படைத்தவனே
விலைப் பொருட்களைத் தரவந்தோம்
கண்ணின் மணியைக் காப்பவனே
கனிவும் பணிவும் தரவந்தோம் (2)
உவகை பொங்கி உன்னதனே
உள்ளதனைத்தும் தரவந்தோம் (2)
பூமகனே பாலகனே ஏற்றுக்கொள்வாயோ
 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா