Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் 1436-குழந்தை இயேசு வருவீரே  
குழந்தை இயேசு வருவீரே
என் இதயக் குடிலில் எழுவீரே - 2 (2)

விண்ணில் வாழ்ந்த இறைமகனே
விண்ணவர் போற்றும் தூயவனே (2)
என்னில் நீவிர் வந்திடவே
இன்னிசையாலே அழைக்கின்றேன்

இறைவனின் தூதர் துதித்திடவே
இடையர்கள் உம்மை வணங்கிடவே (2)
பறவைகள் எல்லாம் பாடிடவே
பணிவுடன் உம்மை அழைக்கின்றேன்

உலகக் கவலையில் யான் மூழ்கி
உம்மை மறந்து அலைந்தேனே (2)
உள்ளமே எழுந்து வந்தருள்வீர்
உண்மை இன்பம் அளித்தருள்வீர்

 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா