கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | 1433-குவா குவா குழந்தை யேசு |
குவா குவா குழந்தை யேசு கொஞ்சும் மொழி கேளு - இவர் குவலயத்தை ஆழவந்த விந்தைக் குழந்தையடி ஆராரோ ஆரிரரோ ஆரிரரோ ஆரிரோ (4) Happy Christmas to you Merry christmas to you Happy Christmas to you Happy New year to you உன்னதத்தில் மாட்சிமையும் மண்ணகத்தில் அமைதியையும் அளித்திட்ட தேவபாலன் இவரல்லவா அமைதியை அளிப்பவரும் இவரல்லவா ஆராரோ பாடிடுவோம் ஆராத்தி எடுத்திடுவோம் கன்னிமரி தேவசுதன் இவரல்லவா Happy Christmas to you Merry christmas to you Happy Christmas to you Happy New year to you மாட்டுத் தொழுவத்தினில் கந்தை துணி பொதிந்து முன்னிட்டியில் கிடப்பவரும் இவரல்லவா முடிசூடா மன்னரும் இவரல்லவா ஆராரோ பாடிடுவோம் ஆராத்தி எடுத்திடுவோம் மாமரி தேவ மைந்தன் இவரல்லவா Happy Christmas to you Merry christmas to you Happy Christmas to you Happy New year to you பொன்னும் பொருளுமில்லை புகழும் சிறப்புமில்லை எதையே கொடுப்பதெனும் குழப்பமல்லவா உன்னுள்ளம் போதும் என்பார் யேசுபாலகன் ஆராரோ பாடிடுவோம் ஆராத்தி எடுத்திடுவோம் ஆற்றல் அளிப்பவரும் இவரல்லவா Happy Christmas to you Merry christmas to you Happy Christmas to you Happy New year to you புத்தாண்டு பிறந்திடவே புதுவாழ்வு கிடைத்திடவே எதையே செய்வதெனும் குழப்பமல்லவா இறைவிருப்பம் செய்தால் வெற்றிஉண்டல்லவா ஆராரோ பாடிடுவோம் ஆராத்தி எடுத்திடுவோம் நிலைவாழ்வைத் தருபவரும் இவரல்லவா Happy Christmas to you Merry christmas to you Happy Christmas to you Happy New year to you |