கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | 1432-குட்டிப்பாப்பா யேசுவைப் |
குட்டிப்பாப்பா யேசுவைப் பார்க்கப் போறோமே கூடி நாங்கள் அவரைத்தான் வணங்கப் போறோமே பெத்லேகேம் ஊர் ஊரும் சத்திரத்தை நாடி வந்து சத்திய பாலனைப் பார்க்கப் போறோமே நித்திய ராஐனை வணங்கப் போறோமே பனி படர்ந்து -ஊசியிலே (2) காடுகளைக் கடந்து சென்று இனிமையான -யேசுவையே ((2) பார்க்கப் போறோம் நாங்கள் இன்று வழிநெடுகப் பாடிடுவோம் அவரது புகழை பழிநீக்கப் பாரில் வந்த இயேசு ராஐனை குட்டிப்பாப்பா யேசுவைப் பார்க்கப் போறோமே கூடி நாங்கள் அவரைத்தான் வணங்கப் போறோமே விண் மீன்கள் - வழிகாட்ட (2) விண்நிலா ஒளிவீச கண்மணியாய் - யேசுவையே (2) கண்டிடுவோம் கருத்துடனே காரிருள் சூழ்ந்தாலும் கவலையில்லையே பேரருள் தந்திடும் தேவமுல்லையே |