Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் 1430-காலத்தின் நிறைவிலே  
காலத்தின் நிறைவிலே கனிந்த செல்வமே
ஞாலத்தின் வாழ்விவே மறைந்த தென்றலே - 2
வாராய் வாராய் கண்மணியே
யேசுவே செல்லக் குழந்தையே
விண்ணில் இறைவனின் மாட்சியே
மண்ணில் அமைதியின் சாட்சியே - 2

எத்தனை எத்தனை எதிர்பார்ப்பு
எங்கும் எதிலுமுன் வரவேற்பு
உத்தமர் உமது வருகைக்காய்
நித்தம் மனதினில் எதிர்நோக்கு - 2
அத்தனையும் நிறைவானதே
ஆனந்தமே நலமானதே
எம்மிலொருவராய் எங்களிறைவனார்
மண்ணிலவதரித்தார்
மண்ணின் பெருமையை நம்மில்; உரிமையை
மாந்தர்க்குகந்தளித்தார்

விண்ணில் மலர்ந்தது இறையாட்சி
எம்மில் கலந்தது உம்மாட்சி
மண்ணில் பிறந்தது வானகமே
விண்ணில் இணைந்தது வையகமே - 2
அத்தனையும் சமமானதே
அன்பினிலே இணையானதே
எம்மிலொருவராய் எங்களிறைவனாய்
மண்ணிலவதரித்தார்
மண்ணின் பெருமையை நம்மில்; உரிமையை
மாந்தர்க்குகந்தளித்தார்
 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா