கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | 1426-கன்னி மரியின் மடியில் வந்த |
கன்னி மரியின் மடியில் வந்த பாலகா கண்ணில் ஈரம் உனக்கு இன்று ஏனடா (2) குளிரின் தொல்லையோ - உனக்கு குடிலும் இல்லையோ குழந்தை உன் முகம் - காண எவருமில்லையோ காலமெலாம் காத்து வரும் வல்ல தேவன் பிள்ளை நீயடா உன் முகத்தைப் போல நானும் பார்த்ததில்லையே உன் குரலைப் போல நானும் கேட்டதில்லையே (2) ஏனோ இந்த கண்ணுல கண்ணுல நீரோ இங்கு வந்தது வந்தது நீயே அதைச் சொல்லவும் சொல்லவும் சோகம் அதைத் தள்ளவும் தள்ளவும் உனது துயர் தீர்க்க - நானும் உடன் வருவேன் பாலகா மழலை உந்தன் மொழியில் - நானும் மகிழ்ந்திருப்பேன் பாலகா படிக்கும் வயதில் குழந்தைகள் பணிபுரிவது ஏன் பாரமான பளுவை அவர் தினம் சுமப்பது ஏன் (2) காட்டேன் என் கண்ணிலே கண்ணிலே ஈரம் இங்கு வந்தது வந்தது கேட்டேன் என் நெஞ்சிலே நெஞ்சிலே சோகம் மனம் கொண்டது கொண்டது இவரின் விடியல் நாளுக்காக தினம் உழைப்பேன் நண்பனே மழலை இவர்கள் உழைப்பைச் - சுரண்டும் நிலை ஒழிப்பேன் நண்பனே |