Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் 1425கள்ளமில்லா ஒரு வெள்ளி நிலா-  
கள்ளமில்லா ஒரு வெள்ளி நிலா - என
உள்ளமெல்லாம் வரும் தெள்ளமுதாய்
தீராத பாசமே நறும் தேனான இயேசுவே
அன்பே பாரினில் நீயும் நானும்
ஒன்றாய் வாழ்வது வாழ்க்கையே
வாரும் தேவா வாருமே
எங்கே நோக்கினும் தனிமையே - உனை
என் மனம் மறந்ததன் தீமையே
கண்களும் நீரினில் ஆடுதே - இறைக்
கர்த்தருன் பூமுகம் தேடுதே
தேவ தேவா சிலுவை நாதா
திரும்ப நாவினில் வாருமே (2)
தாகம் யாவும் தீருமே
தூய வாழ்வைத் தாருமே
தாயும் நீயாய் சேயும் நானாய்
வாழவேண்டும் நாளுமே

எல்லாம் தேவனின் மகிமையே - அதை
எங்ஙனம் புகழ்வது ஏழையே
என் மனம் நீ வரும் போதிலே - பெரும்
நிம்மதி ஆயிரம் வாழ்விலே
வாழ்வும் நீயே வழியும் நீயே
உயிரும் நீ இனி தேவனே (2)
வாரும் நாவில் இயேசுவே
நீயும் நானும் பேசவே
ஆயன் நீயாய் தோளில் நானாய்
வாழவேண்டும நாளுமே
 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா