Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் 1424-கண்ணில் தெய்வம் தோன்றுதே  
கண்ணில் தெய்வம் தோன்றுதே
கன்னித் தாயின் கையிலே
பாடு எந்தன் நாவே பாலன் இயேசு பாவை
கிறிஸ்மஸ் மங்களங்களே

ஏழ்மையான மந்தையில்லமே - வாழ்வில்
ஏங்குவோர்க்கு சேதி சொல்லுமே - 2
பாரில் செல்வம் நீங்கிப் போகுமே - 2
நீதியுள்ள வானில் நல்லவர்க்கு வாழ்வு
உண்டு என்று விண்ணில் சொல்லுதே

வார்த்தை மனித உடலெடுத்ததே
நம்மில் வாசம் செய்து வாழ்வளித்ததே - 2
பேசும் தெய்வம் இயேசு பாலனே - 2
துன்பமேதுமில்லை சாவும் நோவும் இல்லை
புதிய வானம் உதயமானதே

பாரில் உள்ள ஏழை யாவரும்
இயேசு கண்களுக்கு மேன்மை அல்லவா - 2
பொன்னும் மண்ணும் தேவையில்லையே - 2
அன்பு கொண்ட உள்ளம் தெய்வம் வாழும் இல்லம்
அன்பு ஒன்றே தெய்வமாகுதே
 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா