Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் 1423-கடவுள் இந்த உலகினுக்களித்த  
கடவுள் இந்த உலகினுக்களித்த
காணிக்கை அன்பு காணிக்கை (2)
அன்னைமரியின் வயிற்றில் பிறந்த மைந்தன்
காணிக்கை தெய்வ காணிக்கை (2)

மனித உறவினை விரும்பிய இறைவன்
மைந்தனைத் தந்தார் காணிக்கை (தன்.. - 2)
புனித அன்பின் வெளிப்பாடாக
புதல்வனைத் தந்தார் காணிக்கை (தன்... - 2)
இறைவன் தந்தார் காணிக்கை - உளம்
எண்ணி வியக்கும் காணிக்கை (2)
இயேசுவே அந்த காணிக்கை
விலைமதிக்க இயலா காணிக்கை (2)

காணிக்கை தந்த இறைவனுக்கு
கைம்மாறென்ன செய்திடுவோம் (நாம்... - 2)
ஊனுடல் தந்த இயேசுவுக்கு
உவந்திட என்ன தந்திடுவோம் (அவர்... - 2)
இறைவன் நமது தந்தை - என்று
வாழ்வது நமது காணிக்கை (2)
இயேசு வாழ்வின் ஒளியென
சாட்சி பகர்வது இதய காணிக்கை (2)

 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா