கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | 1409-எம்மைத் தேடி ஆசீர் தந்த |
ஸரிகரி கமகரி ஸா - ஸ நி 2 ஸரிகரி கமகரி ஸா எம்மைத் தேடி ஆசீர் தந்த குழந்தை இயேசுவே னன னன னன னா -2 நன்மை கோடி நித்தம் செய்தாய் குழந்தை இயேசுவே னன னன னன னா -2 உன்னை மகிமை செய்யச் செய்ய நாங்கள் வந்தோமே உன்னை மாட்சி நாளும் செய்ய மகிழ்வாய் வந்தோமே உன் ஆசீர் நாளும் தருவாய் உன்பாசம் எம்மேல் பொழிவாய் உம் கரமே எமக்குத் தருவாய் புதுவாழ்வை நிதமே அருள்வாய் நம் தன னன னன னன னன னா தீம்த தீம்த தீம்த தினனா ஓளியை நோககும் மலர்போல உன்முகம் தேடி ஓடிவந்தோம் மனநோய் உடல்நோய் நீக்கிவிடும் உன்னருள் மழையில் நனைய வந்தோம் ஆறுதல் நாளும் பெற்றிடவே தீமைகள் விலகி அகன்றிடவே திருத்தலம் நாடி ஓடி வந்தோம் குழந்தை இயேசுவே அருள் புரிவாய் தின தந்தானதான தந்தானதான தந்தானதானனனா தன தந்தானதான தந்தானதான தந்தானதானனனா எளியோர் வறியோர் துயர் நீக்க குழந்தை வடிவில் வந்தவரே தாயாய் தயவாய் தேற்றிடவே அன்பின் உருவாய் உதித்தவரே நாளும் உந்தன் ஆசியிலே நித்தம் எம்மை நடத்திடவே புதுமை புரியும் பூமகனே குழந்தை இயேசுவே தயை புரிவாய் |