கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | 1422-ஏற்றிடுவீர் எம் காணிக்கைப் பொருளை |
ஏற்றிடுவீர் எம் காணிக்கைப் பொருளை எமக்காய்ப் பிறந்த நல் இயேசுவே (2) அன்பாலே உலகை நிரப்பிய அழகே அளிக்கவந்தோம் எங்கள் இதய அன்பை (2) ஆவியின் கனிகளைப் பொழிகின்ற தலைவா - 2 தருகின்றோம் தளிர்ப்பதம் பணிந்தே என் நெஞ்சில் நிம்மதி ஒளி தந்த நிலவே இன்னுயிர் கலந்த வான் முகிலே (2) வாழ்வினை பலியாய் மலர்ப்பதம் படைத்தே - 2 இறைஞ்சுகின்றோம் பரமனுன் திருமுன் பொன்னோடு போளமும் தூபமும் ஏந்தி மன்னவர் மூவர் காணவந்தார் (2) மூவுலகாளும் ஆண்டவர் உமக்கே - 2 மனமுவந்தே காணிக்கை தந்தோம் |