Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் 1413-என்ன என்ன நன்றிகள்  
என்ன என்ன நன்றிகள் உனக்கு சொல்லுவேன்
இதயராகம் தினமும் பாடி நன்றி சொல்லுவேன்
நன்றி நன்றி பாடுவேன் உள்ளம் மகிழ்ந்து போற்றுவேன்
பிறந்தார் யேசு பாலன் நன்றி பாடுவேன்

குழந்தையாகப் பிறந்து வந்தாய் நன்றி யேசுவே
எனது பாவம் போக்க வந்தாய் நன்றி யேசுவே
பாவி எந்தன் இதயம் தேடி மலர்ந்த இயேசுவே
Happy xmas வாழ்த்துக் கூறி நன்றி பாடுவேன்
நன்றி பாடுவேன்

வார்த்தையாகப் பிறந்து வந்தாய் வல்ல தெய்வமே
வசந்தமாக என்னில் வந்தார் அன்பு தெய்வமே
அமைதி உலகில் நிலவிடவே மலர்ந்த இயேசுவே
Happy xmas வாழ்த்துக் கூறி நன்றி பாடுவேன்
நன்றி பாடுவேன்

 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா