Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் 1419-என் ஜீவனே என் இயேசு  
என் ஜீவனே என் இயேசு பாலனே
ஏழை கோலம் பூண்ட தேவனே
விண் ராஜனே எம் வானதூதனே
இம் மண்ணில் வந்த ராஜராஜனே ஆ....ஆ....

மந்தையோடும் கந்தையோடும்
வந்த தேவனே
எந்தன் பாவ நிந்தை போக்க
வந்த தேவனே
விந்தையாக இம்மண்ணில் வந்தாய்
அந்தமும் ஆதியும் இயேசுவே - 2

விண்ணும் மண்ணும் சொந்தமான
எந்தன் தேவனே
விண்ணின்று மண்ணில் வந்த
எந்தன் தேவனே
இன்பமாக என் நெஞ்சில் வந்தாய்
அன்பனும் நண்பனும் இயேசுவே
 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா