Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் 1420-என் இயேசுவே என் தெய்வமே  
என் இயேசுவே என் தெய்வமே
என் வாழ்வின் வாழ்வாய் மலர்ந்தவரே (2)
உம் சக்தி ஆற்றல் என்னோடு வாழும்
என் செயல்கள் எல்லாம் - உம்
பெயரைச் சொல்லும் (2)
என் இயேசுவே என் தெய்வமே
என் இதயப் பேழையில் பிறந்தவரே

உன் ஸ்பரிசம் என் அங்கம் எங்கெங்கும் உண்டு
உடல் தூய்மை போற்றியே என்றென்றும் வாழ்வேன்
அறிவாற்றல் ஒளியேற்றும் தீபம் நீ வாழும் - என்
நினைவினிலே இருள் சூழ ஒருபோதும் துணியேன்
என் இதயமே பேராலயம் திருப்பீடத்தில் அருள் ஓவியம்
மலராய் மணமாய் நான் மாறுவேன் - 2

நீ சென்ற காலடித் தடயங்கள் தேடி
குழந்தையாய் தொடர்வேன் உனை தினமும் வேண்டி
மண்மேடோ மலை முகடோ முட்புதரோ எதுவோ
உனைத் தொடர்ந்து நான் வருவேன் தடைகளைத் தாண்டி
அன்பாலே வாழ்வை அர்ச்சனை செய்வேன்
நேயத்தின் செயலால் உன் விருந்தில் அமர்வேன்
உறவே உயிரே உனைப் பிரியமாட்டேன் - 2
 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா