Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் 1412-என் இயேசு நீ வரவேணும்  

என் இயேசு நீ வரவேணும்
எனக்காக நீ வரணும் (2)
சீக்கிரமாய் நீ வரவேணும்
நான் சிரிச்சிப் பேசி மகிழ வேணும் (2)
உன் பிள்ளை எனை நீ ஆ....ஆ...ஆ.....
ஆசீர்வதிக்கவேணும் (2)

கேளுங்கள் தருவேனென்று சொன்னது நீதானே
நான் கேக்கிறது - உன் வார்த்தை மட்டும்தானே
என்னோடு நீ இருந்தா ஆடி ஓடி மகிழ்வேன்
என்னோடு நீ இருந்தா பாட்டுப்பாடி சிரிப்பேன்

தேடுங்கள் கிடைக்குமென்று சொன்னது நீதானே
நான் தேடுகிறது - உன் அன்பை மட்டுந்தானே
என்னோடு நீ இருந்தா.

தட்டுங்கள் திறப்பேனென்று சொன்னது நீதானே
நான் தட்டுறது - உன் வீட்டை மட்டும் தானே
என்னோடு நீ இருந்தா


 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா