கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | 1417-என் இதய வேந்தனே |
என் இதய வேந்தனே இயேசு பாலனே உன்னைத் தாலாட்ட வா - ராஜனே உந்தன் தாயாக வா (2) ஆராரிரோ ஆரிரரோ - 4 பாவி நம் அருகிலே மரியன்னை மடியிலே பூமகன் அழுவதும் ஏனோ - இந்த பாமரன் பாவங்கள் தானோ (2) கந்தையை உடுத்தியே சிந்தையைக் கவர்ந்திட்டாய் (2) விந்தை என் இயேசு பாலனே - இந்த மந்தையைக் காக்கும் மேய்ப்பனே - ஆராரிரோ... உலகம் முழுவதும் உந்தன் கையிலே கலகமின்றி வாழவே - என்றும் அமைதியை உம்மில் காணவே (2) ஏழ்மையின் சின்னமாய் எளிமையின் கோலமாய் (2) குடிலினில் உம்மைத் தந்தவா - இந்த குவலயம் காக்க வந்தவா - ஆராரிரோ... |