கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | 1421-எழுந்திடாய் உலகமே |
எழுந்திடாய் உலகமே இருளில் நின்றெழுந்திடாய் குழந்தையாம் இயேசுவின் அருள் ஒளி கண்டிடாய் எழுந்திடாய் உலகமே எழுந்திடாயோ நடுநிசி வேளையில் நடுங்கும் குளிரினில் பயமிகுதனிமையில் பாலகன் அழுகின்றார். வண்ணப் பொலிவாம் வானவர் பாடிட எண்ணரும் இசையிலே இன்கீதம் எழுந்திட மன்னவர் மன்னனை மாண்புடன் மடியினில் தன்னலம் கருதாத் தாய்மரி ஏந்திட குளிரின் கொடுமை மேனியை வாட்டிட இருளின் ஆட்சி தலைவிரித்தாடிட ஓளியாம் திருமகன் குழந்தை வடிவினில் அழியா இன்பம் அளித்திடும் பாலகன் |