கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | 1416-எல்லாருக்கும் இன்று திருவிழா |
எல்லாருக்கும் இன்று திருவிழா ஏழை மக்களுக்கு பெருவிழா பொல்லார்க்கும் நல்லார்க்கும் பொழிகின்ற மழைபோலே எல்லார்க்கும் அருள் வழங்கும் இயேசு பிறந்த திருவிழா வண்டு வந்து தீண்டாத செண்பகப்பூ வாசமதை தென்பொதிகை தென்றல் - எங்கும் சுமந்து செல்லுது (2) அன்னை மரி வான்மதியாய் அன்புமகன் கதிரவனாய் மண்ணுலகில் யாவருக்கும் மகிழ்வைத் தந்தது பண்ணிசைத்து நடனம் செய்து பாட்டுப் பாடுங்கள் கண்மணியாம் குழந்தை இயேசு பாதம் நாடுங்கள் விண்ணகத் தந்தையின் அன்பு மழையிது மண்ணக மாந்தரின் நெஞ்சில் மலருது காரிருளை நீக்குகின்ற காலை இளங் கதிரவன் போல் பாவஇருள் போக்க வந்த உலக ஞாயிறு (2) அவர் சொல்லும் மொழி தேனமுது செல்லும் வழி விண்ணரசு அவ்வழிதான் யாவருக்கும் மீட்பு என்பது பண்ணிசைத்து நடனம்... |