Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் 1415-எந்தன் நெஞ்சுக்குள்ளே நீ பிறக்க  
எந்தன் நெஞ்சுக்குள்ளே நீ பிறக்க
எனக்கென்ன கவலை என் இறைவா - இனி
அச்சமென்ப தெனக்கில்லை
வழியெங்கும் தடையில்லை தலைவா
உந்தன் பிறப்பு சிறப்பு தருமே
இறையரசு நனவாகுமே - 2
உந்தன் வார்த்தை என் வாழ்வின் உயிராகுமே உயிராகுமே
எந்தன் நெஞ்சுக்குள்ளே - 3 பிறக்கவா 2

பாதைகள் தெரியாமல் நான் திரிந்தேன்
வழி காட்டிடும் விண்மீனாய் நீ பிறந்தாய்
உந்தன் கரமானது ஆ ....
எந்தன் துணையாகுமே ஆ.....
உந்தன் கரமானது எந்தன் துணையாகுமே
உந்தன் வார்த்தை என் வாழ்வின் உயிராகுமே உயிராகுமே
எந்தன் நெஞ்சுக்குள்ளே - 3 பிறக்கவா 2

வாழ்க்கையை இழந்து நான் தவித்தேன்
நான் உன்னோடு என்று என்னில் நீ மலர்ந்தாய்
உந்தன் உறவானது ஆ .....
உயிர்த் துணையானது ஆ ....
உந்தன் உறவானது உயிர்த் துணையானது
உந்தன் வார்த்தை என் வாழ்வின் உயிராகுமே உயிராகுமே
எந்தன் நெஞ்சுக்குள்ளே - 3 பிறக்கவா 2

 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா