Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் 1411-உன்னை நினைக்கையிலே  
உன்னை நினைக்கையிலே
உள்ளம் உருகிடுதே மரியின் திருமகனே
ஒளி பிறந்தது வழி திறந்தது
அருள் சுரந்தது இருள் பறந்தது (2)

உலகம் முழுவதும் உனது வடிவம்
எதிலும் உன் வதனம்
இறையே வா நெஞ்சில் உறைந்திடவே
கறைகள் மறைந்திடவே
இதயக் குடிலில் உதயம் தரவே
குடிலில் உதித்தவனே

வறுமை எளிமை உனது வசந்தம்
கருணை உன் மகுடம்
மலரே வா கையில் தவழ்ந்திடவா
புனிதம் மணம் தரவே
இருண்ட உலகம் ஒளியைப் பெறவே
இரவில் உதித்தவனே
 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா