Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் 1410-உலகின் ஒளியே உண்மையின்  
உலகின் ஒளியே உண்மையின் விளக்கே
உயிரினில் கலந்திட வா
மண்ணகம் வாழும் மனிதரின் வாழ்வை - 2
மாண்புற செய்திட வா
இயேசு பாலனே இதயம் வாருமே
மனிதம் நாளும் புனிதம் காணும்
மகிழ்வை அளித்திட வா

இருள்வாழ்வை அகற்றிட வருவீர் - புது
அருள்வாழ்வை அளித்திட எழுவீர் - 2
பலகோடி உள்ளங்கள் மகிழ - நீர்
பகலவனாய் உதித்திடுவீர் - 2
எந்தன் உள்ளம் உன்னை பாடும்
எங்கும் உந்தன் உறவை தேடும்
என்னுயிரே வருவீர்

புகழ் தேடி அலைகின்ற போது - என்னில்
புதுவாழ்வை அளித்திட வருவீர் - 2
கரைசேரா ஓடங்கள் ஆனோம் - நீர்
கரைசேர்க்கும் துடுப்பாவீர் - 2
உந்தன் வரவால் உள்ளம் மகிழும்
எந்தன் உயிரும் உன்னில் இணையும்
என் மலரே வருவீர்

 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா