Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் 1410-இம்மானுவேல் இம்மானுவேல்  
இம்மானுவேல் இம்மானுவேல்
கடவுள் நம்மோடு (2)
உலகினைக் காக்க உயிரினை மீட்க
பிறந்தார் மண்ணில் பாலனாய் (2)
பிறந்தார் மண்ணில் பாலனாய் - 2

புதுமைகள் நிறைந்திட புதுயுகம் படைத்திட
புவியினில் பாலன் பிறந்தார் (2)
சமத்துவம் ஓங்கிட சமயங்கள் நீங்கிட
சர்வபிதா இன்று பிறந்தார்
ஒன்று கூடி வாருங்கள் - உண்மை
அன்பை பாருங்கள் (2)
குடிலில் பிறந்த குழந்தை
இயேசுவை பாருங்கள் (2)

தாழ்வுகள் நீங்கிட தர்மங்கள் ஓங்கிட
தவப்புதல்வன் இன்று பிறந்தார் (2)
தடைகளை நீக்கிட தயக்கங்கள் போக்கிட
தாய்மடியில் இன்று மலர்ந்தார்
தாகம் தீர வாருங்கள் - தாழ்
பணிந்து வேண்டுங்கள் (2)
தரணியில் வந்த தங்க
நிலாவை பாடுங்கள் (2)

 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா