Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் 1402-இன்று நமக்காக மீட்பர்  
இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார்
அவரே ஆண்டவராம் மெசியா - 2 (2)

ஆண்டவர்க்கு புதியதொரு பாடல் பாடுங்கள்
மாநிலத்தோரே நீங்களனைவரும்
அவரைப் போற்றுங்கள் (2)
ஆண்டவரைப் போற்றுங்கள் - அவர்
பெயரை தினமும் வாழ்த்துங்கள் (2)
அவர் தரும் மீட்பை நாள்தோறும்
மகிழ்ச்சியாய் அறிவியுங்கள்

புறவினத்தாரில் அவரது மாட்சியை
எடுத்துச் சொல்லுங்கள்
மக்களனைவரிலும் அவர்தம் வியத்தகு
செயல்களைக் கூறுங்கள் (2)
வானங்கள் மகிழட்டும் - இந்த
பூவுலகம் களிகூறட்டும் (2)
கடலும் அதிலுள்ள உயிரினமும்
ஆரவாரம் செய்யட்டும்
 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா