Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் 1400-இயேசு பிறந்த நாளிது  
இயேசு பிறந்த நாளிது
வானம் மகிழ்ந்து ஒளிருது (2)
காலம் கனிந்த காலையில்
கடவுள் தந்த கொடையிது

மணமில்லாத மலரை போல்
இசையில்லாத பறவைப் போல் (2)
அருளில்லாத பாருலகம்
அடைந்த துயரம் மாறவே (2)

துள்ளி மகிழும் குழந்தையே
உள்ளம் கொள்ளை கொண்டதே (2)
உந்தன் அன்பின் வரவிலே
விண்ணும் மண்ணும் இணைந்ததே (2)

தொழுவில் தவழும் பாசமே
கடவுள் தந்த திருமொழி (2)
சிந்தை குளிரும் பூமுகமே
உலகை ஒளிரச் செய்யுமே (2)
 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா