கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | 1399-இந்த மண்ணில் வந்து |
இந்த மண்ணில் வந்து மன்னன் இயேசு பிறந்தார் இங்க நாமும் கூடி பாட்டுப்பாடி மகிழ்வோம் (2) இறைவாக்கினர்கள் சொன்னபடி பிறந்த நம் இயேசுவைப் போற்றிடுவோம் போற்றிடுவோம் நாம் போற்றிடுவோம் மார்கழி இரவின் குளிரினிலே மாமரி மகனாய் வந்துதித்தார் (2) மாடுகள் அடையும் தொழுவத்திலே - 2 மனிதருள் மாணிக்கம் பிறந்தாரே Happy Christmas - 2 Happy Happy Christmas - 2 புவியில் நன்மனம் கொண்டவர்கள் நெஞ்சினில் நிம்மதி கண்டிடவே (2) அமைதியின் வேந்தன் அவனியிலே - 2 அழகிய குழந்தையாய் உதித்தாரே Happy Christmas - 2 Happy Happy Christmas - 2 |