கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | 1397-இதோ மாபெரும் நற்செய்தி |
இதோ மாபெரும் நற்செய்தி இறைவன் மனிதரானார் இறைகுலமே எழுந்திடுக இறைபலி செலுத்திடவே உன்னதத்தில் தேவனுக்கே மகிமை உண்டாகட்டும் பூமியில் அமைதி உண்டாகட்டும் தேவனின் வார்த்தை என்றாகட்டும் பாலனின் முகம் காண - ஞானிகள் வந்தனரே பாதை காட்டும் - விண்மீன் வழியில் தேவகுழந்தையைக் கண்டனரே நாளும் இறைவழி நாம் நடந்தால் நாளெல்லாம் இறைமுகம் காண்போம் அன்பை அணிந்து - அமைதி அருளும் Happy Christmas போகும் திசையெல்லாம் இயேசுவின் புகழ்சொல்வோம் அன்பை விதைத்து அவனியெல்லாம் அவரின் சீடர்கள் நாமென்போம் சாதிபேதம் களைந்திடுவோம் சான்று பகர்ந்தே வாழ்ந்திடுவோம் அன்பை அணிந்து - அமைதி அருளும் Happy Christmas |